×

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள் ஆகும். மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. இந்த வருவாயின் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் 2-வது அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்து வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும்.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் நேற்று வரை ரூ.330 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு 5% தொகை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநகராட்சி சார்பில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. வரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பிஓஎஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம். https://tnurbanepay.tn.gov.in இணையதளம் வாயிலாகவும் சொத்து வரி செலுத்தலாம். https://tnurbanepay.tn.gov.in இணையதளம் வாயிலாகவும் சொத்து வரி செலுத்தலாம்.

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு